பயங்கரவாத்தடைச்சட்டத்தை சட்டத்தை நீங்கள் கொடூரமானது என்று சொல்கிறீர்கள்.

பயங்கரவாத்தடைச்சட்டத்தை சட்டத்தை நீங்கள் கொடூரமானது என்று சொல்கிறீர்கள். காவல்துறை அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதை எப்போதும் தவறாகப் பயன்படுத்துவார்கள். இது இந்த பயங்கரமான சட்டத்தின் வரலாறாகும். உங்கள் அரசாங்கம் வேறுவிதமாக இருக்க விரும்பினால். நீங்கள் நெறிமுறையாக இருக்க விரும்புகிறீர்கள் என்றால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று கிளீன் சிறிலங்கா திட்டம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின்போது உரையாற்றுகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவரது உரையில் மேலும் தெரிவிக்கையில் –
அரசாங்கத்தின் இந்த கிளீன் சிறிலங்கா திட்டத்தைப் பற்றி நாம் விவாதிக்கும் போது நான் இணையத்தில் சென்று அறிந்து கொள்ள முயற்சித்தேன்இ அது சமூக இசுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை போன்ற மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரிவுகளைப் படிக்கும் போதுஇ அந்தப் பிரிவுகள் அரசியல் பிரச்சினைகளை முதன்மையாகவும் சுற்றுச்சூழலையும்இ தூய்மையையுடனும் தொடர்புபட்டிருந்தன. அவை மிகவும் பரந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தது என்று நான் நினைக்கிறேன்.
ஒருமைப்பாட்டை உறுதி செய்வதன் மூலம்; நம்பிக்கையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவைஇ கடந்த பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் அரசாங்கத்திற்குக் கிடைத்த ஆணையைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. தூய்மையைப் பொறுத்தமட்டில் கடந்த 75 வருடங்களாக இந்த நாட்டை ஆட்டிப்படைத்த ஊழல் கலாச்சார அரசியல் கலாச்சாரம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கௌரவ நீதி அமைச்சர் அவர்கள் இங்கு வந்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது கருத்துக்கள் தொடர்பாக தெரிவிக்க வேண்டும். ஜே.வி.பி யுடன் இணைந்த தேசிய மக்கள் சக்தியின்இ தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பான அவர்களின் கடந்தகால நிலைப்பாடுகள் காரணமாகஇ எனக்கு அதிக உடன்பாடு இல்லை. இனப்பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜே.வி.பி இன்னும் தெளிவாக்கவில்லை. கடந்த 75 ஆண்டுகள் நெறிமுறையாக இல்லைஇ அதனால்தான் மக்கள் முழுமையான மறுசீரமைப்பை விரும்பினர்இ என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் பயன்படுத்திய நெறிமுறை என்ற சொல்லின் அர்த்தத்தை நீங்கள் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன்.இ நீங்கள் அந்த நெறிமுறை என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது முக்கியமானது அதன் ஒரு பகுதி என்னவென்றால்இ இன்று நீங்கள் சொல்வதற்கும்இ நாளை நீங்கள் சொல்வதற்கும்இ உங்கள் சொந்த செயல்களின் பொருள் மற்றும் அர்த்தங்களுக்கும் இடையில் நீங்கள் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.
எனவே தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும் . நான் மட்டுமல்ல ஜே.வி.பியே உடன்படாத ஒரு சட்டமுமாகும். இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஜே.வி.பியே கண்டித்திருக்கிறது. ஏனென்றால் அவர்களும் இச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டார்கள். தேர்தலின் போதும் அதற்கு முன்பும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று கூறப்பட்டது. 2015 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் தேர்தல்கள் முடிந்தபின்இ அப்போதைய அரசாங்கம் முதல் வாரத்தில் மிக விரைவாக பின்வாங்கிவிட்டது. நினைவேந்தலின் போதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சில கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் காவல்துறையினர் நீதிமன்றங்களுக்குச் சென்று பின்னர் தமது பி அறிக்கைகளில் இருந்த பயங்கரவாத குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றிருந்தனர்.
நீங்கள் இந்தச் சட்டத்தை கொடூரமானது என்று சொல்கிறீர்கள்இ காவல்துறை அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதை எப்போதும் தவறாகப் பயன்படுத்துவார்கள்இ இது இந்த பயங்கரமான சட்டத்தின் வரலாறாகும். உங்கள் அரசாங்கம் வேறுவிதமாக இருக்க விரும்பினால்இ நீங்கள் நெறிமுறையாக இருக்க விரும்புகிறீர்கள் என்றால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

12:54 pm

எமது இலக்குகள்