இன்றைய தினம் நாவாந்துறை மக்களையும் விளையாட்டுக்கழகங்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மக்களும் விளையாட்டு வீரர்களும் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கட்சியின் உறுபினர்கள் மற்றும் வேட்பாளர்கள், நாவாந்துறை மக்களுடன் நேரடியாகப் பேசி, அவர்களின் தேவைகளை அறிந்துகொண்டனர். நிகழ்வின் முக்கிய நோக்கம், சமூக நலன்களை மேம்படுத்தும் திட்டங்களை விளக்கி, விளையாட்டின் மூலம் இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விடயங்களில் கட்சியின் திட்டங்களை பகிர்வதாக இருந்தது.
அத்துடன் எமது தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை முன்னிலைப்படுத்தி சமரசமற்ற கட்சி கொள்கைகளை தொடர்ந்து பரப்புவதாகவும், தமிழ் மக்களின் உரிமைகளை அடைய உறுதியாகப் போராடுவதாகவும் உறுதியளித்தார்.