தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இன்று யாழ்ப்பாணத் தேர்தல்த் தொகுதியில் போட்டியிடும் தங்களின் வேட்பாளிற்கான வேட்புமனுக்களை அதிகாரப்பூர்வமாக யாழ் மாவட்டச்  செயலகத்தில் தாக்கல் செய்தது. இந் நிகழ்வின் தொடக்கத்தில் முன்னணியின் வேட்பாளர்கள் மற்றும்  செயற்பாட்டாளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு,  நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி தமது வேட்புமனுவை வைத்து வணங்கினார்கள்.  

பின்னர், யாழ் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செய்தியாளர்களைச் சந்தித்து, இத்தேர்தலின் முக்கியத்துவம் குறித்தும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரே மக்களின் அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டுவருகின்றது, இது போன்ற ஒரு அரசியல்க்கட்சியை ஆதரிக்கத் தமிழ் மக்கள் ஏன் முன்னே வரவேண்டும் என்பதையும் விரிவாக விளக்கினார். குறிப்பாக அவர், “தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை பாதுகாக்க, இந்த தேர்தல் முக்கியத் திருப்பமாக அமையும். அதிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தற்போது பிரதிநிதித்துவப்படுத்தி, நம் மக்களின் நலனுக்காக நிலைத்துப் போராடும் ஒரு அரசியல் இயக்கமாக  விளங்குகிறது,” என்றார்.

5:27 pm

எமது இலக்குகள்