தற்போது ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி. அரசாங்கம் கிளீன் சிறிலங்கா என்று படம்காட்டுவதை விடுத்துஇ உண்மையாக நாட்டை கிளீன் செய்வதாக இருந்தால் குற்றவாளிகளையும்இ லஞ்சம் ஊழலையும்இ வன்முறைக் கும்பல்களையும் கிளீன் செய்ய வேண்டும். அதைவிடுத்து படம் காட்டும் செயற்பாடுகளில் ஜே.வி.பி அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளரும்இ சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று மன்னார் நீதிமன்றத்தின் முன்பாக சிறிலங்கா காவல்துறையினர் கடமையில் இருந்தபோதுஇ இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே சட்டத்தரணி சுகாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரவிக்கப்படுகிறது.
மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்தவர்கள்; மீதே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாகவும்இ துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.