தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட எட்டுப்பேருக்கெதிராக பலாலி சிறிலங்கா காவல்துறையினரால்; மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினராக இருந்து கொண்டு நீதிமன்ற கட்டளைகளை மீறி பொது சமாதானம் சீர்குலையும் வகையில் பொது வீதியினை மறித்து சட்டவிரோத ஆர்ப்பாட்டம் செய்தமை என்று பலாலி சிறிலங்கா காவல்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையே நேற்று மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட கனிஸ்ட சட்டத்தரணிகள் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்தனர்.
குறித்த வழக்கு தொடர்பில் பலாலி சிறிலங்கா காவல்துறை தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானதும் சோடிக்கப்பட்டதுமான குற்றச்சாட்டுக்கள் என்றும், சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட எமது கட்சிக்காரர்கள் எந்தவிதத்திலும் கௌரவ நீதிமன்றின் கட்டளைகளை மீறி நடந்திருக்கவில்லை என்றும் சட்டத்தரணிகள் தமது வாதத்தினை முன்வைத்திருந்தனர்.
இரு தரப்பு வாதங்களின் அடிப்படையில் சந்தேக நபர்களான எட்டுப்பேரையும் சொந்தப் பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். குறித்த வழக்கு தொடர்பிலான அடுத்த விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ம் நாளுக்கு திகதியிடப்பட்டுள்ளது.
- 021 221 2530
- mediatnpf@gmail.com
- கட்சி தலைமையகம்: 16, மணல்தறை வீதி, யாழ்ப்பாணம்.