மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்படவுள்ளது!
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்படவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். குறித்த நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.00 மணிக்கு, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலாமண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்,” மக்கள் மயப்படுத்தப்படவேண்டிய அரசியல்” என்னும் கருப்பொருளில், யாழ்.பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராமின் நினைவுப்பேருரையும் இடம்பெறவுள்ளது. 2000 ம் ஆண்டு ஜனவரி 5ம் நாளன்று கொழும்புநகரில் குமார் பொன்னம்பலம் அவர்கள் அவரது […]
தமிழ்த் தேசிய அரசியலின் பின்னடைவுக்கு சம்பந்தனும் சுமந்திரனுமே காரணமானவர்கள்…
தமிழ்த் தேசிய அரசியலின் பின்னடைவுக்கு சம்பந்தனும் சுமந்திரனுமே காரணமானவர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்றைய நாள் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல்களின் போது இனப்பிரச்சினைக்கு தீர்வாக சம்ஸ்டித் தீர்வைக் கோரி வாக்குப் பெற்றுவிட்டு தேர்தல் முடிந்த கையோடு மக்களிடம் பெற்ற ஆணைக்கு மாறாகவே அவர்களுடைய செயற்பாடு அமைந்திருந்தது. பிரதான கட்சியாக இருந்த தமிழரசுக்கட்சி வேகமாக தனது செல்வாக்கை இழந்து […]