திருகோணமலை நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் சந்தியில்: சட்ட விரோதமான பௌத்த விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம். கஜேந்திரகுமார் MP செ.கஜேந்திரன்.MP கலந்து கொண்டிருந்தனர்.

திருகோணமலை நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் சந்தியில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஒரு சிங்கள குடிமகன் கூட இல்லாத பகுதியில் இன நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் அமைக்கப்படவிருக்கும் பௌத்த விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம். கலந்துகொண்ட திருகோணமலை வாழ் தமிழ் இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் கட்சியின் பிரசாரச் செயலாளர் சட்டத்தரணி ந.காண்டீபன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் க.குகன், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் பு.துகானந்தன், யாழ் மாவட்ட அமைப்பாளர் ஆ.தீபன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.