அன்னை சீதேவி அம்மாவுக்கு இரங்கல்கள்.

தங்கையா அண்ணனின் தாயாருக்கு அஞ்சலிகள்.

முல்லை மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டு மாணவர் அமைப்புப் பொறுப்பாளராகவிருந்த தங்கையா அண்ணனின் அன்புத் தாயார் பரராஜசிங்கம் சீதேவி அம்மாவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

தங்கையா அண்ணன் மிகுந்த ஆளுமை மிக்க முன்னாள் போராளி. மாணவர் அமைப்புப் பொறுப்பாளராக பொறுப்பு வகித்தபோது அவரது ஆற்றல் ஆளுமை அன்பு பண்பு இரக்ககுணம் என்பவற்றால் பல்லாயிரம் மாணவர்களை தன்பால் ஈர்த்து தேசப்பணிகளை முன்னெடுத்தவர்.
யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளின் பின்னரும் தமிழ்த் தேசமக்கள் விடுதலைப் போராட்டத்தை தம் உயிரிலும் மேலாக நேசிக்கிறார்கள் என்றால் இவர் போன்ற அற்பணிப்பாக மக்களை நேசித்து பணியாற்றிய போராளிகளும் மாவீரர்களுமே காரணமாவர்.
யுத்த முடிவில் காணாமல் ஆக்கப்பட்ட தங்கையா அண்ணனை காணாத ஏக்கத்துடனேயே தனது கண்களை மூடினார் அன்னை சீதேவி.

பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனின் முகநூலில் பிரதி செய்யப்பட்டது.