சமரசமில்லா தமிழ்த் தேசியவாதி கஜன் பொன்னம்பலம்

பிறிஸ்நேவ் ஊடகவியலாளரது பார்வையில்

நாடாளுமன்றத்தின் இருதுருவ அரசியலில் ஆளும்கட்சி, எதிர்கட்சி என்ற நிலமைகளைக்கு செல்லாது தமிழ்த்தேசிய அரசியலை சொல்லாலும், செயலாலும் தர்க்க ரீதியில் நடக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பாதுகாப்பு ரீதியில் அச்சுறுத்தப்படுவது இலங்கை அரசியலின் இயல்பு.

இனவாதத்தினை வெளிப்படுத்தும் தரப்புக்கள் கஜேந்திரகுமாருக்கு எதிராக தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை.

அவை ஒவ்வொன்றும் தமிழர்களுக்கு எதிரான விடயங்களுக்காக போராடுவதையும், கருத்துக்களை கூறும் நடத்தைகளை முன்வைத்தே கஜேந்திரகுமார் வீட்டிற்கு முன் கோசம் எழுப்புகின்றார்கள்.

கஜேந்திரகுமாரின் ஜனநாயக வெளி தொடர்பிலான பார்வை விசாலமானது என்பதற்கு இன்றைய பத்திரிகை செய்தி உதாரணம்.

‘எனக்கு , என்கருத்துக்கு எதிராக போராடுவதற்கும் சகல உரிமைகளும் எதிர்தரப்பினருக்கு உண்டு. நான் பெளத்தர்களுக்கு எதிரானவனல்ல, ஆனால் தமிழர்களின் தொல்பொருட்களை பெளத்தத்தினை முன்னிலைப்படுத்தி அழிக்க எடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பேன். மக்களின் ஆணைக்கு மாறாக செயற்படமாட்டேன்’

கஜேந்திரகுமார் போராட்டங்களை எதிர்க்கவில்லை. காரணம், தொடர்ச்சியாக தமிழ் மக்கள் உரிமைகளுக்காக போராடவேண்டியவர்கள். ஆகவே என் வீட்டிற்கு முன்னுள்ள போராட்டத்தை எதிர்க்கின்ற போது தமிழர்களின் போராட்ட உரிமை கேள்விக்கு உட்படலாம் என்ற சிந்தனையாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். எதற்காக அப்படி கூறினாரோ தெரியவில்லை.

கொழும்பில் இருக்கும் தமிழர்கள் வடகிழக்கு மக்களின் உரிமைகளுக்காகவும், சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடினால் அல்லது கருத்துக்களை கூறினால் அவர்களுக்கு முன்னும் இப்போராட்டங்கள் வரும்.

இது இனக்கலவரங்களையே ஞாபகப்படுத்துபவையாக இருக்கின்றது.

தனியே இனவாதிகளின் எழுச்சி கஜேந்திரகுமாருக்கு மட்டுமானதல்ல! அது பேராபத்தான எழுச்சி!

ஆனால் கஜேந்திரகுமாரினை எதிர்க்கவேண்டிய தேவை ஏன் இனவாத்த்துக்கு எழுகின்றது!

சர்வதேச இராஜதந்திர தொடர்புகளை முன்னணி கொண்டிருந்தாலும். அல்லது சந்திப்புக்களை நடத்தினாலும் தமிழ் தேசிய ரீதியில் கட்சியாக ஆணைபெற்றதுக்கு மாறாக எவ்விதமான செயற்பாடுகளையோ அல்லது கருத்துமாற்றங்களையோ அரசியல் பரப்பில் மேற்கொள்வதுகிடையாது.

தமிழ்த்தேசிய அரசியலை மூன்றாம் தரப்பின் விருப்புக்காகவோ அல்லது நலனுக்காகவோ மாற்றுவது கிடையாது. ஆனால் அந்த நடைமுறை நேர்மையான வெளிப்பாடு. விமர்சனத்துகுரியது. தமிழ் தேசிய உறுதியாகவும் பார்க்ககூடியது.

நாடாளுமன்றில் ஆளும்கட்சியையும், எதிர்கட்சி உறுப்பினர்களையும் தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை, இல்லையேல் என கூச்சலிடுவதற்கு பதிலாக விவாதத்துக்கு வாருங்கள், நான் அதற்கு தயார் என தென்னிலங்கையின் முகத்தினை தோலுரித்துகாட்டுவதிலும், நாட்டின் பொருளாதார முன்னேற்றம் இனப்பிரச்சனை தீர்வுக்கு முன் சாத்தியமில்லை என உரக்க கூறுவதாலும், நாடாளுமன்ற நடத்தைகளை சாவலுக்கு உட்படுத்தும் உரைகளிலும், இறுதியுத்த விடயங்களுக்கு சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு போன்றவற்றில் தனித்துவத்தை கஜேந்திரகுமார் கொண்டிருக்கின்றார்.

தென்னிலங்கை கட்சிகளின் நலன்களை கவனத்தில் எடுக்காது தமிழர்களின் தேசிய நிலைப்பாடு என்ற தோற்றப்பாட்டினை கொடுப்பதுடன், சகதமிழ் கட்சிகளுக்கு நெருக்குதல்களை உருவாக்குதல்!

அரசியல் ரீதியில் முன்னணியின் பேச்சும், நடத்தையும் ஒன்று. அதுபோன்று கட்சிக்குள் இருப்பவர்களின் நிலைப்பாடும், தலைமையின் நிலைப்பாடும் ஒன்று. ஆயுதக்குழுக்களாக தோற்றம் பெறதா கட்சி ஒன்றினை இன்றுவரை கட்டுக்கோப்புடன் தலைமை தாங்குவது அவ்வளவு இலகுவானதல்ல.

கட்சியால் ஒரு முடிவு அறிவிக்கப்பட்டால் அதனை யாரும் அசைத்து பார்க்கமுடியாது. ஒரு தலைமைத்துவ பண்பு.

கட்சி ரீதியிலும் சரி அல்லது தேசிய அரசியல் ரீதியிலும் முடிவு ஒன்றை விரைவாகவும், நேருக்கு நேராகவும் எடுக்ககூடியவராக கஜேந்திரகுமார் உள்ளார்.

ரணில் பேசினால் என்ன? இந்திய வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க தூதுவர் கூறினாலும் என்ன? நிலைப்பாடுகளில் மாற்றம் இல்லை. புலம்பெயர் தமிழர்களின் வியாபார நலன்களுக்காக கட்சியை அடைவு வைக்காத தரப்பாக இருக்கின்றமை

பெளத்த விகாரை, காணிஅபகரிக்கும் முயற்சி, பொலிஸாருடன் இடம்பெறும்விவாதங்கள், இராணுவத்துடன், தொல்பொருள் திணைக்களத்தினருடன் நேரடியாக சாவலுக்கு உட்படுத்தி நடைபேறும் உரையாடல்கள், போராட்டங்களில் முன்னின்று கலந்துகொள்ளும் விடயங்கள் ஒரு தமிழ் தேசிய தலைவராக அடையாளப்படுத்துகின்றது.

கொழும்பில் பிறந்தேன், சிங்கள நண்பர்கள் உண்டு. றோயல் கல்லூரி வாசம், போராட்ட அரசியலை இல்லாது செய்யும் முயற்சி, தோல்விமனப்பாங்கான அரசியலை வளர்க்காமை, அரசியல்வாதிகள் நடந்துகொள்ளவதற்கு இருக்கும் வழிமுறைகளும், மக்கள் போராட்டங்களால் சர்வதேச ரீதியில் உருவாக்கப்படும் கருத்தியல்கள்.

இவ்வாறான அனைத்தினையும் தென்னிலங்க பொறுத்துகொள்ளாது, அதுபோன்று இப்படியான நிலமை தமிழர்கள் இடத்தில் அதிகரிப்பது சிங்கள பெளத்த பெரும்தேசிய வாதத்தினை முடக்கும் அனுகுமுறை. ஆகவே அது தன் எதிர்ப்பை காட்டும்.

கஜேந்திரகுமார் கைதுசெய்ப்பட்டார். தற்போது கொழும்பின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. அடுத்த இலக்கு எதுவாகவும் இருக்கலாம்

இந்த போக்கு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஏற்படலாம், அனைத்து தமிழர்களுக்கு ஏற்படலாம். அதனை எதிர்கவேண்டி முறைகள் தொடர்பிலான கருத்தாடல்கள் அவசியம்!!

இந்த நவீன விஞ்ஞான உலகில் கலவரங்கள் சாத்தியமில்லை என்று கூறும் தரப்பினர், பொதுஜனபெரமுன உறுப்பினர்களின் வீடுகள் ஒரு இரவில் பாதுகாப்பு தரப்பினர் முன்னிலையில் எரிக்கப்பட்டது.

இந்தியாவின் மணிப்பூர் கலவர கொடுமைகள் எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நடந்தவை. இந்த நவீன உலகத்தினால் கட்டுப்படுத்தவோ அல்லது காட்சிப்படுத்தவோ முடியாது போனவை.

மிகப்பெரிய திட்டமிடல்களை எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்புக்கள் இருப்பதும் கிடையாது, அப்படி இருப்பதை மாற்றியமைப்பது அவ்வளவு கஷ்டமும் இல்லை.