- முகப்பு
- செயற்றிட்டங்கள்
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை – முன்னணியினரால் நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
நேற்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
விளக்கேற்றி, நினைவுத் தூபிக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தலில் த.தே.ம.முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகர் , த.தே.ம.முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் , பொன் மாஸ்டர், கட்சியின் பத்திராதிபர் ஈழத்தமிழ்மணி மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.