- முகப்பு
- செய்திகள்
வடக்கு ஆளுநரின் சதி முயற்சி முறியடிப்பு – சட்டத்தரணி சுகாஷ்
வடக்கு ஆளுநரின் சதி முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
தமிழ் மக்களின் காணிகளை ,மக்களின் விருப்பங்களை மீறி ,முப்படைகளுக்கும் வழங்கும் செயற்பாட்டுக்கான கூட்டத்தை ஆளுநர் இன்று கூட்டியுள்ள நிலையில்,மக்களை திரட்டி ஆளுநரின் சதி முயற்ச்சியை தற்காலிமாக முறியடித்துள்ளோம்.
தென்னிலங்கையில் ரணில் ராஜபக்ச அரசு பேச்சு வார்த்தை என்ற போர்வையில் நாடகங்களை நடாத்தி ,வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதனை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இன்று அடாவடியாக எமது போராட்டத்தை ஆளுநர் நிறுத்த முற்பட்டார். ஆகவே அவருக்கு நாம் எமது முடிவை தெளிவாக கூறியிருந்தோம்.மிரட்டல்களுக்கு நாம் அஞ்ச மாட்டோம்.அத்துடன் ஆளுநர் பொய்களையும் கூறினார்.
நாம் யாருக்கும் தனித்தனியாக, காணி சுவீகரிப்பு தொடர்பில் கடிதம் அனுப்பவில்லை என்று ஆளுநர் இங்கு பொய் கூறினார்.ஆகவே நாம் ஒன்றை மட்டும் சொல்லுகின்றோம் ,ஆளுநரின் இத்தகைய அடாவடியாக செயற்பாட்டுக்கு நாம் ஒரு போதும் அஞ்ச மாட்டோம்.தமிழ் மக்களின் நிலங்களின் ஒரு துளியையும் சிங்கள பேரினவாத கும்பலுக்கு வழங்க மாட்டோம் என்றார்.