தியாக தீபம் நினைவேந்தல் பொதுச்சுடரை  கைகளால் தூக்கி அப்புறப்படுத்திய சிங்கள அடிவருடிகள்- தடுக்கச்சென்றவர் தீக்காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

தியாக தீபம் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவேந்தலின் இறுதஜ நாளான இன்று பொதுச்சுடரினை ஏற்றும் பொழுது சிங்களஅடிவருடிகளால் குழப்பம் விளைவிக்கப்பட்டது.  நினைவேந்தலினைக்குழப்பும் வகையில் காவடி எடுத்துவந்த ஜனநாயகப் போராளிகய் குழுவினர் பொதுச்சுடரினை ஏற்றிய பின்னர் அதனை அப்புறப்படுத்தும் நோக்குடன் பொதுச்சுடரினை  விலக்கிய போது அதனை தடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் மீது தீக்காயம் ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நினைவேந்தலைக்குழப்பும் வகையில் உருவாக்கப்பட்ட திடீர் நினைவேந்தல் கட்டமைப்பினர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீது திட்டமிட்டு சேறு பூசும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.