தியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் சிங்கள அரச புலனாய்வாளர் அடாவடி- ஏற்பாட்டுக்குழுவினர் மீதும் தாக்குதல் நடவடிக்கை

தமிழ் மக்களின்  சுதந்திர வாழ்வுக்காய்  இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன்  அவர்களின்  35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று  (26.09.2022) யாழ், நல்லூரிலுள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்த உணர்வெழுச்சியை சிதைக்கும்  நோக்கில்  . இந்தியாவின்  அடிவருடி வேலன் சுவாமி சார்ந்த  பொதுக் கட்டமைப்பினர்  குழப்பம் ஏற்பட்டுள்ள சம நேரத்தில் சிங்கள அரச புலனாய்வாளர் துளசி மாற்றம் பிரபா ஆகியோர் தியாக  தீபம்  திலீபன்    அவர்களின் நிகழ்வினை குழப்பும் விதமாக திலீபன் அண்ணாவின் முன்பாக சுடர் விட்டெரிந்த தீபத்தினை தூக்கி வீசியதில் அது  ஒருவர் மேல் பட்டு அவர் காயமடைந்துள்ளார்

மேலும் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரோடு விதண்டாவதாத பிரச்சினைகளையும் தோற்றுவித்து தொடர்ச்சியாக நினைவேந்தலை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இவர்களுடன் இணைந்து மேஜர் மணிவண்ணன் தரப்பும் குழப்பம் விளைவித்து ஏற்பாட்டுக்குழுவினர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.