- முகப்பு
- செய்திகள்
திலீபன் வழியில் வருகிறோம் நடைபயணம் பொத்துவிலில் ஆரம்பம்!
தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது வருட நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்திப்பவனி இன்று காலை பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரான செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், அருட்தந்தை சக்திவேல் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்திப்பவனியானது 26.09.2022அன்று யாழ்ப்பாணம் நல்லூரை வந்தடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.