செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் மட்டக்களப்பில்!

14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேடமாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடமொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்டது.
இந்நினைவேந்தலில் பொதுமக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.