மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்சல் தரவை ஆக்கிரமிப்புக்கெதிராக போராட்டம்!

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான பல லட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் தரவையான மயிலத்தமடு பகுதி சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைக் கண்டித்து இன்று காலை மட்டக்களப்பு செங்கலடி சந்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் பொதுமக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

பௌத்த சிங்கள அரச பயங்கரவாதத்தினால் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகளும், சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது