திருமலை திருமால்புரம் மக்களுக்கு வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பு வழங்கப்பட்டது!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக சுயபொருளாதாரம் மற்றம் சுயஉற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வடக்கு கிழக்கில் செயற்படுத்தப்பட்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை திருமால்புரம் பகுதியைச் சேர்ந்த வீட்டுத் தோட்டம் அமைக்க ஆர்வமுள்ள குடும்பங்களிற்கு விதைகள், நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீபிரசாத் அவர்களின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.