வரணி இடைக்குறிச்சி பாடசாலை மாணவர்களுக்கு வீட்டுத் தோட்ட ஊக்குவிப்பு வழங்கப்பட்டது!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக சுயபொருளாதாரம் மற்றம் சுயஉற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வடக்கு கிழக்கில் செயற்படுத்தப்பட்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக வரணி இடைக்குறிச்சி தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்கு விதைகள், நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் திருமதி கிருபா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான கிருசாந்தி, இராசேந்திரம் சுதாகர் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இச் செயற்திட்டத்தை முன்னெடுத்தனர்.