ஜோசப் ஸ்டாலின் கைதைக் கண்டித்து மட்டுநகரில் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், ரணில் அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் அருகில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.