அம்பாறை பாண்டிருப்பு பகுதி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது!

பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் அன்றாட உணவினைப் பெற்றுக் கொள்ள சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்களிற்கு சமைத்த உணவு வழங்கும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்டம் பாண்டிப்பு பகுதியிலுள்ள குடும்பங்களிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களினால் சமைத்த உணவு வழங்கி வைக்கப்பட்டது.