சுயபொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அம்பாறையில் விதைகள் வழங்கிவைப்பு!

சுய பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்தும் முகமாக பாண்டிருப்பு முதலாம்/இரண்டாம் பிரிவு மற்றும் மோட்டுவட்டை போன்று பகுதிகளில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கு பயிர் நாற்றுக்கள் மற்றும் பயிர் விதைகள் என்பன தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வழங்கிவைக்கப்பட்டது.