எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தால் தாக்கப்பட்டவர்களை சந்தித்த கஜேந்திரன் எம்.பி!

முல்லைத்தீவு விஸ்வமடு எரிபொருள் நிலையத்தில் நேற்றையதினம் இராணுவத்தினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இன்றையதினம் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.