- முகப்பு
- பதிவுகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் விவசாய நாற்றுக்கள் பொது மக்களுக்கு வழங்கிவைப்பு!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் ( 2022/06/19) நாற்றுக்கள் பொது மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்து தமிழ் உறவுகளின் அனுசரணையில் தற்போதைய பொருளாதார பிரச்சினையை ஈடுசெய்யும் முகமாக இவ்வாறு நாற்றுக்கள் மற்றும் பருப்பு வகைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிலாலிவேம்பு, மாவைக்குடா, வைக்கல மற்றும் தம்பலவத்தை கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு 10 வகையான நாற்றுக்களும் பருப்பு வகைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.