புதுக்குடியிருப்பு கைவேலியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மக்கள் சந்திப்பு!

புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் பொதுமக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் மயூரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமி்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்செல்வராசா கஜேந்திரன், யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் மற்றும் கட்சியின் செயற்பாட்டளர்கள் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்ருந்தனர்.

குறித்த இந்த மக்கள் சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சம்மந்தமாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.