அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன் தாயாருக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி!

அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன்(குட்டி) அவர்களுடைய தாயாருக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகரன் ஆகியோர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி
விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயாரான
வி.வாகீஸ்வரி அவர்கள் 15. 06 2022, புதன் கிழமை இரவு மரணடைந்துள்ளார்.
2017 தந்தையின் மரணச்சடங்கில் கலந்துகொண்டு இறுதிக் கடமைகளை செய்ய ஒரு மணித்தியாலம் அனுமதி வழங்கப்பட்டது. 26 வருடங்கள் சிறை வாழ்க்கை- தற்போது சிறையில் உள்ள அரசியல் கைதிகளில் சிறுவயதில் கைதுசெய்யப்பட்டவரும், அதிகூடிய வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த கைதியும் இவர்தான்.
குடும்பத்துடன் இருந்த நாட்களை விட சிறையில் இருந்த நாட்களே அதிகம் எனவே பொதுமன்னிப்பு அளித்து அவரை விடுவிக்க வேண்டும் என இவரின் தாயார், அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்துவந்தார்.
தான் இறப்பதற்கு முன் மகனை காணவேண்டும் என ஆவலாய் இருந்த இவர் தன் பிள்ளையின் திருமுகம் காணாமலே மறைந்துவிட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.