மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 31வது நினைவேந்தல் இன்று!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 12.06.1991அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் 220 தமிழ்ப் பொதுமக்கள் இராணுவத்தினரால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

அப்படுகொலையின் 31வது வருட நினைவேந்தல் இன்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.