பிரசித்த நொத்தாரிஸ் தர்மராஜா அவர்களின் 4 வது வருட நினைவேந்தல்!

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், பிரசித்த சட்டத்தரணியுமான தர்மராஜா அவர்களின் 04ம் வருட நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இவ் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.