விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் போராட்டம்!

பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!
பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி,
எமது இனத்தை அழிக்க பெற்ற
ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா , அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய், தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவர் போன்ற கோசங்கள் எழுப்பபட்டது.
இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.