பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பருத்தித்துறையில் உபகரணங்கள் வழங்கப்பட்டது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் நிதிஒதுக்கீட்டின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமூக நிறுவனங்களிற்கு 24.03.2022அன்று உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூகநிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் திரு.ப.சுரேஸ், மகளின் அணிச் செயலாளர் கிருபா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.