மகிந்தவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

மகிந்தவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் – 19.03.2022

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் ஒன்றுகூடிய வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மகிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய்,
காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுடன் இணைந்து  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

தொடர்புடைய செய்தி

கந்தரோடையில் புத்தவிகாரைக்கு அடிக்கல் நாட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது!