- முகப்பு
- நிகழ்வுகள்
கந்தரோடையில் புத்தவிகாரைக்கு அடிக்கல் நாட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது!
சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கந்தரோடையில் புதிதாக அமைக்கப்படவிருந்த விகாரைக்கு அடிக்கல் நாட்டும் தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் கந்தரோடையில் தொல்பொருட்கள் அமைந்துள்ள பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்நிலையில் கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீடிரென கந்தரோடையில் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் தனது விஜயத்தை ரத்து செய்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் பிரதமரது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கிருந்து விலகிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.








தொடர்புடைய செய்தி