பருத்தித்துறையில் மாணவியொருவருக்கு கற்றலுக்கான உதவி வழங்கப்பட்டது!

பருத்தித்துறை சுப்பர்மடத்தை சேர்ந்த வறுமை நிலையிலும், சிறப்பாக கல்வி கற்று வரும் க.பொ.த (உ.த) மாணவிக்கு இன்று கற்றலுக்கான உதவியாக துவிச்சக்கர வண்டி பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் பரமேஸ்வரன் சுரேஸ் அவர்களால் வழங்கப்பட்டது.
பாடசாலைக்கு நீண்ட தூரம் நடந்து செல்வதாகவும், தனக்கு கற்றலுக்கான உதவி வழங்குமாறும் குறித்த மாணவியால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த உதவி வழங்கப்பட்டது. துவிச்சக்கரவண்டியை வழங்குவதற்கு உதவிய புலம்பெயர் நண்பருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்…!