அரசியல் உரிமைக்குரலாய் பேரலையாய் திரண்ட மக்கள்

தமிழர்களது அரசியல் தீர்வை 13வது திருத்த சட்டத்திற்குள் முடக்கும் சதிக்கு எதிராக தமிழர்களின் நிரந்தர தீர்வை வலியுறுத்தி நடைபெற்ற பேரணி பல ஆயிரக்கணக்கான மக்களுடன் உரிமைக்கான எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டுஆரம்பாகிய பேரணி கிட்டு பூங்கா வரை சென்று நிறைவடைந்தது.

இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.