- முகப்பு
- முல்லைத்தீவு
முல்லைத்தீவில் இரு இலவசக் கல்வி நிலையங்கள் ஆரம்பம்!
கொரோனா பேரிடர் காரணமாக கடந்த வருடம் இடைநிறுத்தப்பட்டிருந்த அறிவொளி மாலை நேர ஆரம்பக்கல்விச்செயற்பாடுகள் இன்றையதினம் பெரியகுளம் மற்றும் மன்னகுளம் ஆகிய இரண்டு இடங்களில் மீள ஆரம்பித்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் பெரிய குளம் பாடசாலை முதல்வர் திரு.செந்தில்நாதன் மற்றும் பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியை திருமதி ஜெகஜோதி மற்றும் எமது கல்வி நிலைய ஆசிரியை திருமதி பத்மசிறி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் மன்னகுளத்தில் மீள ஆரம்பிக்கப்பட்ட அறிவொளி மாலைநேரக்கல்விச்செயற்பாட்டுக்கான கலந்துரையாடலில் மாணவர்களும் கல்விநிலைய ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.





