- முகப்பு
- தெரிவுகள்
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவேந்தல் மட்டக்களப்பில்!
சிறிலங்கா இராணுவத்தின் துணைப்படையாக இயங்கிய கருணா – பிள்ளையான் குழுவால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று காலை மட்டக்களப்பில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் குணசேகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள்- கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில் சிறிலங்கா இராணுவத்தின் துணைப்படையாக இயங்கிய கருணா – பிள்ளையான் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




