முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 மாணவர்களுக்கு கல்விக்கான உதவி வழங்கப்பட்டது!

இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கற்சிலைமடு கிராமத்தின் ஐம்பது மாணவர்களுக்கான புத்தகப்பை, காலணி, கற்றல் உபகரணங்கள், சீருடைத்துணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைமாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்புப்பிரதேச சபை உறுப்பினருமான திரு.விஜயகுமார் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் கற்சிலைமடுச்செயற்பாட்டாளர் திரு.மாலன் அவர்களும் முன்னணியின் மாங்குளம் பிரதேசப்பொறுப்பாளர் திரு.பிறேம் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கல்விசார் உபகரணங்களை வழங்கி வைத்தார்கள்.

மேற்படி கல்விசார் உபகரணங்களுக்கான நிதி உதவியை வழங்கிய நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

May be an image of 5 people, people standing and cake
May be an image of 5 people, people sitting, people standing and tree
May be an image of 5 people and people standing
May be an image of 8 people, people sitting and people standing
May be an image of 5 people, people standing and text that says 'HUAWE nova 3i DUAL CAMERA'
May be an image of 2 people, people sitting, people standing, tree and outdoors