- முகப்பு
- செய்திகள்
முழங்காவிலில் தும்புத்தொழிற்சாலை அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது!
வன்னியில் பெண்ணொருவரால் ஆரம்பிக்கப்பட்ட தும்புத்தொழிற்சாலை 22லட்சம் ரூபா செலவில் மேம்படுத்தப்பட்டு சில மாதங்களின் முன் வழங்கப்பட்டிருந்தது. அந்நிலையில் தொழிற்சாலையின் பாதுகாப்புக்கருதி 10லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சுற்றுமதில், வாயிற்கதவு ஆகியவை இன்று கையளிக்கப்பட்டது. இத்தொழிற்சாலை மூலம் 12 பேருக்கான நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், மறைமுகமாக பலரும் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வார்கள்.கனடா உறங்காவிழிகள் அனுசரணையில் அமைக்கப்பட்ட இத்தொழிற்சாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டு, கையளிக்கப்பட்டது.