தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக் கிரமித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க கோரி

தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க கோரியும்இ ஒவ்வொரு பெளர்ணமி நாட்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதி முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றையநாள் செவ்வாய்க்கிழமைகிழமை பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது இன்று புதன்கிழமைகிழமை மாலை 6 மணிவரை நடைபெற்றுள்ளது. குறித்த சட்டவிரோத விகாரையை அகற்றி சட்டவிரோத கட்டுமானம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்கக்கோரி கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு பெளர்ணமி நாட்களிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் காணியின் உரிமையாளர்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதன்போது பலாலி சிறிலங்கா காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பொய்க்குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு வழக்குகள் பதியப்பட்டன. சிறிலங்கா காவல்துறையினரின் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் – ஜனாதிபதி அனுர தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் வைத்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால்இ தையிட்டியில் மக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை இடிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்போது பதிலளித்த வடமாகாண ஆளுநர் காணிகளின் உரிமையாளர்களுக்கு மாற்றுக்காணி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆளுநரின் குறித்த கருத்து காணி உரிமையாளர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய எதிர்வினைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் மக்களின் காணிகளை அபகரித்து தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத திஸ்ஸ விகாரை இடிக்கப்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கருத்துக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இ
காணி உரிமையாளர்க ளால்இ இன்றைய போராட்டத்திற்கு பலம் சேர்க்குமாறு பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ சிவஞானம் சிறிதரன்இ மற்றும் செல்வம் அடைக்கலநாதன்இ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்இ சட்டத்தரணி காண்டீபன்இ சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கானோர் இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கிராமிய உழைப்பாளர் சங்கம்இ தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்இ மக்கள் போராட்ட முன்னணிஇ அரசியல் கட்சிகள் என்பன ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

https://chat.google.com/dm/inlcDcAAAAE/A8ITNUqH9wE/A8ITNUqH9wE?cls=10

9:33 am

எமது இலக்குகள்