கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தலுக்கான மனிதாபிமான செயற்திட்டம் – 2020.03.22

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களை தனிமைப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகளினால் நாளாந்தம் கூலித்தொழிலுக்கு செல்பவர்களின் குடும்பங்கள், நாளாந்தம் ஆட்டோ, பெட்டிக்கடை, வீதியோர வியாபாரம் என நாளந்த உழைப்பினை நம்பியிருக்கும் குடும்பங்கள் தங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களான உணவு பொருட்கள் மற்றும் பால்மா போன்றவற்றினை பெற்றுக்கொள்வதில் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இத்தகைய குடும்பங்களின் நிலமையினை கருத்தில்கொண்டு எமது கட்சியானது மனித நேய அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்களுடன் இணைந்து எமது கட்சி உறுப்பினர்களும் தொண்டர்களும் அத்தியவசிய பொருட்கள் தேவையான குடும்பங்களுக்கு அத்தியவசிய பொருட்களையும் சமைத்த உணவு தேவையான தனிநபர்களுக்கு சமைத்த உணவினையும் தொடர்ச்சியாக விநியோகித்து வருகின்றார்கள்

எமது இத்தகைய செயற்பாட்டில் எம்முடன் இணைந்து செயலாற்ற விரும்புவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

||தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி||