அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்களிற்கான அத்திய அவசிய பொருட்கள் விநியோகம்

அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்களிற்கான அத்திய அவசிய பொருட்கள் விநியோகம்

இன்று நாங்கள் பலரும் வீட்டிலிருந்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்திருப்போம். ஆனால் அன்றாடம் உழைத்து வருமானமீட்டும் பலர் இன்று ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்பது கசப்பான உண்மை. ஊரடங்கு உத்தரவால் நாளை இந்நிலை மேலும் மோசமாகக் கூடிய துயரமான நிலைமை காணப்படுகின்றது.

எம்மால் முடிந்தவரை எம்மக்களின் அவசரக் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றோம். அடிப்படையான உணவுத்தேவைகள், குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றை வழங்கி வருகின்றோம். ஆனால் தேவைகள் அதிகமாக உள்ளமையால் எம்மால் முழுமையாக அவற்றை பூர்த்தி செய்ய முடியாமலுள்ளது.

எம்மோடு இணைந்து உதவ அல்லது பணியாற்ற விரும்பும் தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளை இருகரம் கூப்பி அழைக்கின்றோம். தயவுசெய்து இதற்கு யாரும் அரசியல் சாயம் பூசவேண்டாம். தமிழ்த்தேசம் துன்புறும்போது அமைதியாக இருந்துவிட்டு தமிழ்த்தேசியம் கதைப்பது அர்த்தமற்றது என்பது எமது பார்வை.

நன்றி.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி