தமிழினத்தின் அடையாளத்தைக் காப்பதிலும் தமிழின விடுதலைக்கும் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது.

பெண்களிற்கு சமத்துவம் என்பது கேள்விகளுக்கிடமற்றது. அதற்கான பணிகளை நாம் முன்னெடுத்து அனைவருக்கும் முன்னுதாரணமாகச் செயற்படுவோம் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் எழுச்சி மாநாடு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது அரசியல் பார்வையை நாமே தீர்மானிக்க வேண்டியிருந்தது. அந்தக் கட்டத்திலே எங்களுடைய தேசத்தின் விடுதலைக்கான போராட்டத்திலே மரணித்த மாவீரர்களுடைய வழிகாட்டலிலே அவர்களுடைய அடிப்படைக் கொள்கையை கடைப்பிடித்து நாம் செயலாற்ற வேண்டுமென்ற முடிவை அன்று எடுத்திருந்தோம்.

கொள்கை ரீதியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தங்களுடைய அடிப்படை அரசியல் கொள்கைகளை அன்று வெளிப்படுத்தி இன்றைக்கு பெரியளவிலே தமிழர் தாயகம் முழுவதிலும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மட்டத்திலும் எங்களுடைய அமைப்பினுடைய இயக்கத்தினுடைய அரசியல் கோட்பாடுகள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

அதே சமயம் தமிழ்த் தேசத்துடைய விடுதலை மற்றும் உரிமை பற்றி பேசுகின்ற பொழுது எம்முடைய கொள்கை வெறுமனே சிங்கள தேசத்திடமிருந்தும் சிங்கள தேச ஆக்கிரமிப்பில் இருந்தும் சிங்கள தேசத்துடைய கொடுரங்களில் இருந்தும் விடுவிக்கிறது மட்டுமல்ல. எங்களுடைய தேசம் தமிழ்த் தேசத்திற்கு இருக்கின்ற அனைத்து மக்களும் முழுமையாக விடுதலையடைக் கூடிய வகையில் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்பது தான் எங்களுடைய குறிக்கோளாக இருந்தது.

சிங்களதேசத்திடைய அடக்குமுறையில் சிங்கள தேசம் எங்களுக்கு எதிராக கட்டவிழத்து விட்ட இன அழிப்பிற்கு போராடுவதென்பது ஒரு அங்கம் மட்டுமே. இந்த இனத்துடைய உண்மையான விடுதலை அடைவதற்கு எங்களுடைய சமூகத்துக்குள்ளேயே அதாவது தமிழ்த் தேசத்திற்குள்ளேயே இருக்கக் கூடிய அடக்குமுறைகளை நாங்கள் தூக்கி எறிய வேண்டும்.

எம்முடைய தேசத்திற்குள் பெண் சமத்துவம் அடைந்தே ஆக வேண்டுமென்றும் அத்தோடு சாதி வேறுபாடுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு இந்த தேசத்தில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்ற கொள்கைகயை மதங்களுக்கிடையெ எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் சமத்தவம் பேனுகின்ற வகையிலே எம்முடைய இனம் எதிர்கால பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற இந்த மூன்று முக்கியமான தூண்களைக் கொண்டு நாங்கள் கடந்த ஒன்பது வருடங்களாகச் செயலாற்றிக் கொண்டு வருகின்றோம்.

தமிழ்த் தேசம் முப்பது வருடங்களாக ஒரு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது சிங்கள தேசத்துடைய இனப்படுகொலையில் இருந்து எங்களுடைய தேசத்தைக் காப்பாற்றியது மட்டுமல்ல. எங்கள் தேசத்திற்குள் இருக்கக் கூடிய அடக்குமுறைகளை முற்றுமுழுதாகத் தடை செய்து தேசத்திற்குள் இருக்கக் கூடிய சமூகங்களுக்கிடையே மதங்களுடைக்கிடையே ஆண் பெண் என்ற வேறுபாடுகளை முற்றிலும் அகற்றி ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நாம் முப்பது வருடங்களுக்கு மேலாக அனுபவித்தோம்.

வேறு எந்தவொரு நாட்டிலும் கொள்கை ரீதியாக அந்த முன்னேற்றங்கள் அடைந்திருந்தாலும் கூட ஒரு யுத்த கால கட்டத்திலே இன்னொரு தேசம் எம்முடைய தேசத்தை நசுக்கி அழிக்க விரும்புகின்ற காலகட்டத்திலே வாழ்வா சாவா என்று துடிக்கின்ற கால கட்டத்திலே உள்ளக ரீதியாக அந்த விடுதலையை முழுமையாக அனுபவிக்கக் கூடிய வகையிலே நாங்கள் 35 வருடங்களாக உலகத்திற்கு முன்மாதிரியாக இருந்தோம்.

துரதிஸ்ரவசமாக 2009 ஆம் அண்ட மே மாதம் 18 ஆம் திகதியொட எம்முடைய முன்னேற்றகரமான முற்போக்குவாத தேசியவாதத்தை முற்றிலும் அழிப்பதற்கு சிங்கள தேசமும் தமிழ்த் தேசத்தைக் கட்டி அதை மட்டுப்படுத்தி அதை முழுமையான விடுதலை அடைய விரும்பாத தரப்புக்கள் இன்றைக்கு ஆதிக்கம் செலுத்தி உள்ளக ரீதியாக நாங்கள் விடுதலை பெற வேண்டிய நிலையில் மூன்று முக்கியமான அம்சங்களை வளர்க்கின்ற நிலையிலே தான் நாங்கள் இந்த மாநாட்டை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையிலே இந்த மாநாட்டை நடாத்துகின்ற போது ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்திற்கும் முன்னுதாரணமாக எங்களுடைய அமைப்பு செயற்பட வேண்டுமென்ற குறிக்கோளோடு செயற்படுவது மட்டுமல்ல எம்மைப் பொறுத்தவரையில் சமூகத்திடம் நாம் பெண் சமத்துவத்தை பேண வேண்டும் என்று கேட்பதற்கு முன்பதாக எம்முடைய வீட்டை நாங்கள் திருத்த வேண்டும்.

ஏம்முடைய அமைப்பிற்குள் எம்முடைய இயக்கத்திற்குள் இருக்கக் கூடிய அந்த சமத்துவத்தை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஏம்முடை அமைப்பிற்குள் இருக்கக் கூடிய பெண்கள் எந்தவிதமான எல்லையும் இல்லாமல் தாங்கள் விரும்பின இடத்தை அடையக் கூடிய அளவிற்கு அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் மட்டுமல்ல அவர்களுக்கு அந்த எதிர்காலத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க கூடிய சமத்துவமான அரங்கை ஏற்படுத்திக் கொடுப்பது தான் முக்கியமான விடயமாக இருக்கின்றது.

அந்த வகையில் தான் எம்முடைய அமைப்பு இந்த எழுச்சி நாளன்று செய்திருக்கும் பிரகடனத்தில் எமது அமைப்பில் இருக்கக் கூடிய நிர்வாகக் கட்டமைப்பு அனைத்திலும் பெண்களுடைய பங்களிகளிப்பு ஆகக் குறைந்தது ஐம்பது வீதத்திற்கு நாங்கள் ஒதுக்கீடு செய்த ஒரு கோணத்திலே இன்னும் ஒரு பத்து வருடத்திற்குள்ளே அதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் நாங்கள் அந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

அதிலும் வரவிரக்கின்ற மூன்று வருடத்திற்கிடையிலே நாங்கள் அந்தப் பிரகடனத்திற்கமைய அந்த பிரதிநித்துவம் எங்கள் நிர்வாகக் கட்டமைப்பிலே 25 வீதத்தை உறுதிப்படுத்துவோம். இன்றைக்கு எங்களுடைய தேசம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற நிலையிலே உண்மையில் எங்களுடைய பெண்கள் தான் இந்த தேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றார்கள். அது எந்தளவு தூரத்திற்கு விளங்கிக் கொள்கின்றோம் என்று தெரியவில்லை.

எம்முடைய தேசத்துடைய அடையாளத்தை இனத்துடைய கலாச்சாரம் என அனைத்தையும் பாதுகாப்பதுடன் இன்றைக்கு பெண்கள் குடும்பத்தை பாதுகாப்பது மட்டுமல்ல குடும்ப தலைவர்களை இழந்த நிலையிலே பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு தலைமை வகிக்க வேண்டிய நிலையிலே தங்களுடைய உறவுகள் காணாமலாக்கப்பட்ட நிலையிலே இரவு பகலாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அனைத்த விடயங்களையும் பெண்களின் கைகளிலே நாங்கள் சுமத்தியிருக்கின்றோம். ஆனால் அவர்களுடைய பங்களிப்பு என்பது அரசியல் ரீதியாக அவர்கள் தலைமை வகிக்க வேண்டிய இடத்திலே அவர்களுடைய பங்களிப்பு பூச்சியத்திலே இருக்கின்றது. அந்த நிலைமையை நாங்கள் மாற்றாமல் இருக்கிற வரைக்கும் எம்மைப் பொறுத்தவரையில் எங்களுடைய விடுதலை என்பது வெறுமனே பெயரளவிலே இருக்கக் கூடிய விடயமாக மட்டும் தான் இருக்கும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று எம்முடைய அமைப்பு இந்த நிகழ்வின் ஊடாக இந்த நிகழ்வை ஒரு ஆரம்ப புள்ளியாக நாங்கள் பார்க்கின்றோம். எங்கள் அமைப்பிற்குள் இருக்கக் கூடிய ஆண்களுக்கு இந்த நிகழ்வு கண்ணைத் திறக்கின்ற நிகழ்வாக நிச்சயமாக அமையும். அதுவொரு மிக முக்கியமானவிடயம். ஆனால் துரதிஸ்ரவசமாக எமது அமைப்பின் உறுப்பினர்களைத் தவிர இந்த அரசங்கிலே அண்கள் மிக குறைவாகத் தான் பங்குபற்றினார்கள்.

பெண்களுடைய சமத்துவம் என்ற விடயத்திலே பிரதான பிரச்சனைகளாக இருப்பது ஆண்கள். இந்த ஆணாதிக்க உலகம் தான் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கின்றது. திருந்த வேண்டியது பெண்கள் அல்ல ஆண்கள் தான். ஆனால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஆண்களுடைய பங்களிப்பு என்பது மிக குறைவாக இருக்கின்ற ஒரு நிலையிலே தான் இருக்கின்றது.

எங்களுடைய அமைப்பு வரப்போகின்ற காலகட்டங்களிலே ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்திற்கும் பெண் சமத்துவம் பெண் விடுதலை என்பதில் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறதை நாங்கள் உறுதிப்படுத்துவதற்கு இந்த நிகழ்வில் வாக்குறுதியை கொடுக்க விரும்புகின்றாம் என்றார்.

இதில் குறிப்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்க விரும:புகின்றேன். போர் முடிவடைந்ததற்கு பிற்பாடு தமிழ்த் தேசம் தன்னுடைய இருப்பிற்காகக் போராடிக் கொண்டிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த ஒன்பது வருடங்களாக தமிழ்த் தேசத்துடைய இருப்பை இல்லாமல் செய்வதற்காக ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆந்த முயற்சிக்கு பல காரண அம்சங்கள் இருக்கின்றன.

அதில் முதலிலே தமிழர் ஒரு தேசமாக இருப்பதை கைவிட வேண்டுமென்பது தான் அவர்களுடைய முக்கியமான குறிக்கொள். தமிழர் தொடர்ந்தும் ஒரு தேசமாக சிந்திக்கின்ற வரைக்கும் எங்களுக்கென்று தனித்துவம் பேசும் இனமாக நாங்கள் தொடர்ந்தும் இருப்போம். தமிழ்த் தேச சிந்தனை இல்லாமல் போனால் மட்டும் தான் இந்த ஒட்டுமொத்த நாட்டிலே ஏற்கனவே இருக்கக் கூடிய ஒற்றையாட்சி முறைiமையை நாங்களும் அதாவது வடகிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைமையை உருவாக்கும்.

இது அனைத்திற்கும் தமிழ் மக்கள் தமிழ் தேச சிந்தனையில் இருந்து விடுபட வேண்டும். அந்த நிகழ்ச்சி நிரல் கடந்த ஒன்பது வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. துரதிஸ்ரவசமாக மிக மோசமாக எங்களுடையவர்கள் எம்மவர்கள் தமிழ் மக்களால் தெரிவு செய்த பலர் இன்றைக்கு அந்த நிகழ்ச்சி நிரலுக்கு துணை போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலிலே சிறிலங்கா அரசாங்கம் விரும்பி தயாரித்த ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு ஆணையைக் கேட்டு எம்முடைய தமிழ் மக்களுடைய பிரதான அரசியல் கட்சியாகக் கூறிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது. அந்த ஒற்றையாட்சி அரசமைப்பிற்கு ஆணையைக் கேட்டுப் போட்டியிட்டு அந்த இடைக்கால அறிக்கைக்கு தமிழ் மக்கள் அமோக ஆதரவை வழங்குவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் கடந்த ஒன்பது வருடங்களாக நாங்கள் எங்களுடைய மக்களுக்கு எமது எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளியை வைக்கக் கூடிய சதியை அம்பலப்படுத்தி வருகின்ற நிலையிலே உள்ளுராட்சி தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரியளவிலான பின்னடைவை அடைந்தது. ஓற்றையாட்சி அரசமைப்பிற்கான இடைக்கால அறிக்கைக்கு ஆணையைக் கேட்டு அந்த தேர்தலிலே அவர்களுடைய வாக்கு வங்கி அரைவாசிக்கு மேலே அவர்களை விட்டு விலகிய சூழ் நிலையிலே அவர்கள் அந்த முயற்சியைக் கைவிடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அந்த முயற்சி மீளவும் புதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக கடந்த வாரம் புதிய குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களை ஏமாற்றி இன்னுமொருமுறை ஒற்றையாட்சி அரசியலமைப்பை எம்மீது திணிப்பதற்கும் கடந்த முறைகளுக்கும் விட இந்த முறை வித்தியாசமாக தமிழ் மக்களுடைய முழுமையான ஆதரவோடு அந்த ஒற்றையாட்சியை நாலாவது முறையாக நிறைவேற்றுவதற்கு அவர்கள் முடிவெடுத்திருக்கின்றார்கள். இது தான் இன்றைய அரசியல் யதார்த்தம்.

கடந்த 70 வருடங்களாக இலங்கையிலே மூன்று அரசியல் அமைப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆந்த 3 ம் ஒற்றையாட்சி அரசமைப்பாகத் தான் அமைந்திருந்தன. அந்த மூன்றையும் சிங்கள அரசுகள் நிறைவேற்றுகின்ற போது அந்த மூன்றையும் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருந்தார்கள். எம்முடைய மக்களையும் அதனை நிராகரிக்கச் சொல்லிக் கேட்டார்கள். ஆனால் இந்த முறை எம்மால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பிரதிநிதிகள் தமிழ்ச் சரித்திரத்திலே முதற்தடவையாக அதே ஒற்றையாட்சி அரசமைப்பை நாம் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றார்கள்.

இந்தத் தீவிலே ஒரு இனப்பிரச்சனை இருக்கு என்று உலகத்திற்கு நாங்கள் சொல்லக் கூடிய ஒரு சூழல் இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரித்து வந்ததாலே தான் அமைந்திருந்தது. ஒரு நாட்டுக்கு பிரதான சட்டம் அரசியலமைப்பு. அந்த நாட்டினுடைய அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டு நாட்டில் வாழும் அனைத்து மக்களும்இது எங்களுடைய நாடு என்று சொல்லக் கூடிய வகையிலே அந்த அரசியலமைப்பு அமைய வேண்டும்.

எந்தவொரு நாட்டிலும் அந்த அரசமைப்பை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அங்கு இனப்பிரச்சனை இல்லை. ஆனால் ஏந்தவொரு நாட்டிலே குறிப்பிட்ட இனம் அந்த அரசமைப்பை நிராகரித்துச் செயற்படுகிறார்களோ அந்த நாட்டிலே இனப்பிரச்சனை இருக்கிறதென்று தான் அர்த்தம். அது தான் இந்த நாட்டிலும் இருக்கின்றது.

இலங்கைத் தீவிலும் கடந்த மூன்று அரசமைப்பையும் ஒற்றையாட்சி அரசமைப்பாக நிறைவேற்றிய காரணத்தினாலே தமிழ்த் தரப்புக்கள் அந்த மூன்று அரசமைப்பையும் நிராகரித்து தான் வந்தார்கள். அவ்வாறு நிராகரித்தடியால் இந்தத் தீவிலே இனப்பிரச்சனை இருக்கென்று உலகிற்கு சொல்லியுள்ளோம். ஆனால் இந்த 4 ஆவது அரசியலமைப்பு ஒற்றையாட்சி அரசமைப்பை ஆதரிக்கிறதற்கான முயற்சிகளை எம்மவர்களாலே மேற்கொள்ளப்படுகின்றது.

மூன்று முறை நிராகரித்து நான்காவது முறை நாங்களாகவே விரும்பி அந்த அரசமைப்பை ஆதரித்தால் அதற்குப் பிற்பாடு இந்தத் தீவிலே இனப்பிரச்சனை இருக்கிறதென்ற பேச்சுக்கே இடமிருக்காது. இது தான் இன்றைக்கு இருக்க்க கூடிய ஆபத்து.

அந்த நிலையிலே வரப்போகின்ற புதிய அரசமைப்புக்கான முயற்சியை தமிழ்த் தேசம் ஒருமித்து அதனை முழுமையாக அடியோட நிராகரிக்க வேண்டும். இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்த்தியாகம் செய்தது எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. அந்த போராட்டத்தை இனப்படுகொலை செய்து அழித்ததற்குக் காரணம் மக்கள் ஒட்டுமொத்தமாக அந்தப் போராட்டத்திற்கு பின்னால் இருந்த பொழுது அந்தப் போராட்டத்தை அழிப்பதாக இருந்தால் மக்களையும் சேர்த்து அழித்தால் தான் பேராட்டத்தையே அழிக்கலாம் என்பதால் இன அழிப்பைச் செய்தார்கள்.

அத்தனை இலட்சக்கணக்கான உயிர்களை அவர்கள் தியாகம் செய்தது எங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு என்றால் எங்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது. அந்த உயிர்கள் வீண்போக முடியாது. ஆகவே அந்த ஒற்றையாட்சி அரசமைப்பை நிராகரிக்க வேண்டுமென்பது தான் எங்கள் கடமை. அது தான் எமக்கிருக்கும் பிரதான கடமை.

இன்றைக்கு கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து தயாரித்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறிக் கொள்ளும் சூழலிலே இன்றைக்கு தமிழ்த் தேசத்திலே அந்த ஒற்றையாட்சி அரசமைப்பை நிராகரிக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கின்ற ஒரேயொரு தரப்பாக நாங்கள் மட்டுமே இருக்கிறோம்.

துரதிஸ்ர வசமாக முன்னாள் வடமாகண முதலமைச்சர் கூட கடந்த வம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் பொது நூலகத்திலே நடைபெற்ற போது அவரது உரையிலே அவர் கூறியிருந்தது என்னவெனில் சிங்களவர்கள் ஒரு அரசியலமைப்பை கொண்டு வருகின்றார்கள் அந்த அரசியலமைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் கூட வருவதை நாங்கள் எதிர்க்கத் தேவையில்லை. அது நாங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமாக இல்லாவிட்டாலும் கூட நாங்கள் அந்த அரசியலமைப்பை எதிர்க்கத் தேவையில்லை என்று தான் அவர் கூறுகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதை நாங்கள் ஆதரிக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை எதிர்க்க வேண்டுமென்று கூறுகிறது. இந்த இரண்டு தரப்புக்களுக்கும் இடையே விக்கினேஸ்வரன் ஐயா சொல்கிறார் அந்த அரசமைப்பை நாங்கள் எதிர்க்கத் தேவையில்லை என்று. இது தான் இன்றைய காலம்.

ஆகவே ஏம்முடைய மக்கள் வரப்போகனின்ற ஒற்றையாட்சி அரசமைப்பை சரித்திரத்தில் முதற்தடவையாக ஆதரிப்பார்களாக இருந்தால் அதற்குப் பிற்பாடு இந்தத் தீவிலே இனப்பிரச்சனை இருக்கு என்ற கதைக்கே இடமில்லாமல் போய்விடும். ஆதனை விளங்கிக் கொண்டு தான் நாங்கள் செயற்பட வேண்டும். அந்த உண்மைகள் எம்முடைய மக்களத ஒவ்வொரு வீட்டிற்கும் போய்ச் சேர வேண்டும்.

ஓவ்வொரு தமிழனுக்கும் அது ஒரு குழந்தையாக இருக்கலாம், வயதுபோன முதியோராக இருக்கலாம் அனைவருக்கும் அந்த உண்மைகள் போய்ச் சேர வேண்டும். இன்றைக்கு இந்த அரசியல் யதார்த்தத்தை விளங்கப்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தச் செய்தியைக் கொண்டு போறதற்கும் எங்களுக்கு ஒரு பாலமாக இருப்பது பெண்கள்.

இந்த சுமையும் உங்கள் கைகளிலே சுமக்க வேண்டி வருகின்றது. ஏனென்றால் இன்றைக்கு தமிழர் தாயகத்திலே ஆண் பெண் சமத்துவம் இல்லாத நிலையிலே கூடுதலாக பெண்கள் குடும்பத்தின் சுமையோடு ஒடுக்கப்பட்டு இருக்கின்றார்கள். பிள்ளைகளுடைய வளர்ச்சியென்பது தாய்மார்களின் கையிலே தான் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. அது தான் யதார்த்தம்.

ஏங்களுடைய சரித்திரத்தைப் பற்றி எங்கள் பிள்ளைகள் சரியாக அறிந்து கொள்வதாக இருந்தால் பெண்களுடாகத் தான் அந்த அறிவு போய் சேரலாம். அந்தப் பொறுப்பை தயவு செய்து விளங்கிக் கொள்ள வேண்டும். எம்மைப் பொறுத்தவரையில் வெறுமனே இந்த அரசியல் கருத்துக்களை விளங்கிக் கொள்வது மட்டுமல்ல எமது எதிர்கால சந்திதியாக இருக்கின்ற உங்கள் பிள்ளைகளுக்கும் இந்த உண்மைகளை கொண்டு செல்ல வேண்டும்.

இன்றைக்கு சில வேளைகளில் இந்த ஒற்றையாட்சி முயற்சியை நாங்கள் முறியடிக்கலாம். ஆனால் அவர்கள் இதனை விடப்போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் இதனைக் கொண்டு வருவார்கள். அதனை ஏதோவொரு வகையில் எங்கள் அனுமதியுடன் எங்கள் அனுசரணையுடன் அதை நிறைவேற்றுகின்ற முயற்சியை ஒருபோதும் அவர்கள் கைவிடப் போவதில்லை.

அந்த முயற்சியை நிரந்தரமாக தோற்கடிப்பதற்கு அனைவரதும் பங்களிப்பு மிக மிக முக்கியமாக இருக்கின்றது. ஆகவே இந்த உண்மைகளை நிங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் குடும்பத்திற்கும் கொண்டு செல்வது மட்டுமல்ல. இந்த உண்மைகளை மேலதிகமாக வழிப்புணர்வை ஒட்டுமொத்த இனத்திற்கும் கொடுப்பதற்கு பெண்கள் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.