கிறீஸ்த்தவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனமும், : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

22-04-2019

கிறீஸ்த்தவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனமும், கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்நத இரங்கலும்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மீதும்இ உல்லாச விடுதிகள் மற்றும் குடியிருப்புக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்வதுடன்இ இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழர்களாகஇ இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறவகையிலும் இத்தையக துயரங்கள் ஏராளமானவற்றை அனுபவித்தவர்கள் என்கிற வகையில்இ தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கிறீஸ்தவ மக்களுக்கும் இந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்ட ஏனையவர்களதும் துயரத்தில் இதயபூர்வமாக பங்கெடுத்துக்கொள்வதுடன் தோழமையுண்ரவை வெளிப்படுத்தி அவர்களுடன் இணைந்து நிற்கின்றது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்யு யுத்தம் 2009 மே மாதம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கிறீஸ்தவர்களின் புனித நாளாகிய உயிர்த்த ஞாயிறு தினத்தன்று திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் மீது நடாத்தப்பட்டிருக்கின்ற இந்த படுகொலைகள் சிறிலங்காவில் வாழும் மக்களுக்கு அமைதியும் நல்லிணக்கமும் இன்னமும் கிட்டவில்லை என்பதை மீளவும் வெளிப்படுத்தியிருக்கின்றது. எவ்வளவு விரைவாக இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோமோஇ அந்தளவு விரைவாக இ இந்த தீவில் நிலவும் அடிப்படை முரண்பாடுகளை நாம் அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளை நோக்கி நகர முடியும்.
பாதிக்கப்பட்ட மக்களை மையப்படுத்திய சமாதான மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படாது தவிர்க்கப்படுமிடத்துஇ இந்த தீவானது தொடர்ந்தும் சகிப்புத்தன்மையற்ற இனவாதமும் மதவெறியும் கொண்ட பூமியாகவே திகழும் என்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணியானதுஇ இந்த சந்தர்ப்பத்தில் மீளவும் சுட்டிக்காட்டுகின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட தமிழர்கள் அனைவரும் இனவாதத்திற்கும் மதவெறிக்கும்இ சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறைக்கும் எதிராக உறுதியுடன் நிற்போம் என்பதை இந்தத் தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம். அத்தோடு இபொறுப்புக்கூறலினூடும் நேர்மையான நல்லிணக்கத்தினூடும் வரக்கூடிய உண்மையான சமாதானத்திற்காக விசுவாசத்துடன் செயற்பட விரும்பும் அனைத்துத் தரப்பினரோடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தன் கரங்களை இணைத்து பணிபுரியத் தயாராக இருக்கிறது

நன்றி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்