உலக தமிழ் ஆராட்சி மாநாட்டு படுகொலையின் 45ம் ஆண்டு நினைவேந்தல்

உலக தமிழ் ஆராட்சி மாநாட்டு படுகொலையின் 45ம் ஆண்டு நினைவேந்ததலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரக் குழுவின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு இன்று யாழ்.பிரதான வீதியில் உள்ள நினைவு தூபி முன்பாக இடம்பெற்றது.

4வது உலக தமிழ் ஆராட்சி மாநாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் 11 தமிழர்கள் ப டுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுடைய 45ம் ஆண்டு நினைவேந்தல் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றது. இந் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.