முல்லை மாவட்டத்தில் மனிதாபிமானப் பணி

இத்தாலி பலர்மோ பிராந்திய மக்களின் நிதிப்பங்களிப்புடனும் ஜேர்மன் வரசித்தி விநாயகர் ஆலயத்தின் நிதிப்பங்களிப்புடனும் முல்லைமாவட்டத்தின் பழைய முருகண்டி, புத்துவெட்டுவான், ஐயன்கன் குளம் மக்களுக்கான மனிதாபிமானப்பணியினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமானப்பிரிவு மேற்கொண்டது.

மேற்படி நிகழ்வில் ஐயன்கன் குளம் மனிதாபிமானப்பிரிவுச்செயற்பாட்டாளர் திரு.சுரேஸ், முன்னணியின் முல்லைமாவட்டச் செயலாளர் திலகநாதன் கிந்துஜன், முன்னணியின் கிளிநொச்சி மாவட்டச்செயலாளர் திரு.விமலாதரன், கிளிநொச்சி மாவட்டச்செயற்பாட்டாளர்கள் திரு.முபிள்யான், திரு.சாந்தன், முல்லைமாவட்ட கலைபண்பாட்டுப்பிரிவு உறுப்பினர் திரு.யது ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

உதவித்திட்டத்திற்கான மக்கள் ஒழுங்குபடுத்தலை ஐயன்கன் குளம் திரு.றியொன்சன் மேற்கொண்டார்.