கனடா உறங்கா விழிகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிதிஉதவியில் கணணி அன்பளிப்பு


கிளிநொச்சி மாட்டத்தில் இயங்கும் மாற்று வலுவுடையோர் அமைப்பின் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிப்பதனூடாக  மாவட்டத்திலுள்ள மாற்று வலுவுடையோருக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக கணணித் தொகுதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

கனடாவிலுள்ள உறங்கா விழிகள் தன்னார்வ தொண்டு நிறுவனமானது தாயகத்தில் இயங்கும் கிறீன் பியூச்ச நேசன் பவுண்டேசன் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊடாக மேற்படி கணணி, பிறின்ரர் உள்ளிட்ட பொருட்களை கையளித்துள்ளது. கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் திரு புவனேஸ்வரன் தலைவமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வு இன்று பி.ப3.30 மணியளிவில் கிளநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள கிளி மாற்று வலுவுடையோர் சங்கத்தின் கட்டடத்தில் அவ் அமைப்பின் தலைவர் உமாகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் முல்லை மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன்
ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி பொருட்களை திரு உமாகாந்தன் அவர்களிடம் கையளித்தனர்.