வவுனியா புளியங்குளத்தில் மாணவர்களுக்கு உதவி

அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் தேவஸ்தான நிதி உதவியுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்விமேம்பாட்டுப்பிரிவினால் நிர்வகிக்கப்படும் புளியங்குளம் முத்துமாரி நகர் அறிவொளி கல்வி நிலையம் மற்றும் பழையவாடி அறிவொளி கல்விநிலைய மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது. நிதி உதவி புரிந்த ஆலய அறங்காவலர் சபைக்கும் இச்செயற்பாட்டை முன்னெடுக்க உதவிய திரு.விஜீகரன் திரு.கனிகரன் திரு.கானுஜன் ஆகியோருக்கும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி உதவிய அறிவொளி கல்வி நிலைய ஆசிரியர்கள்
திருமதி.மு.சித்திராதேவி, செல்வி மேனகா ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.