மட்டக்களப்பு வவுணதீவில் மக்கள் சந்திப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தென் தமிழ்ஈழ தேசத்தில் மக்கள் சந்திப்பில் மட்டக்களப்பு வவுனதீவு என்னும் இடத்தில் 19 – 12 – 2019 இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் பொதுச் செயலாளர் செ கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இளைஞர் அணி தலைவர் சக்தி நிர்வாக செயலாளர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மக்களின் மனநிலையை, குறைகள், தேவைகள் மற்றும் இன்றைய அரசியல் சூழ்நிலை என்பவற்றை கலந்து ஆலோசிக்கப்பட்டது.